அரசுக்கு எதிராக நாம் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளோம்- ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின்

 

 


பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இல்லாது ஒழிப்போம் என்று கூறிக் கொண்டு வந்த அரசாங்கம் தற்போது பயங்கரவாத தடைச் சட்டத்தை பாவித்து பலஸ்தீன போராட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்தவர்களை கைது செய்வதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்

 யாழில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

ஆசிரியர் மற்றும் அதிபர் சம்பள விடயத்தில் அரசாங்கம் எவ்வித அக்கறையும் கொண்டு செயற்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் மற்றும் அதிபர் சம்பள முரண்பாட்டிற்கு எதிராக பல போராட்டங்களை நாம் முன்னெடுத்திருந்தோம் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அந்தப் போராட்டம் காரணமாகவே இந்த அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியது ஆனால் இந்த விடயத்தில் அரசாங்கம் அக்கறை கொண்டு செயற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், அரசுக்கு எதிராக நாம் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது