இந்தியாவில் இருந்து கொழும்பிற்கு களமிறக்கப்பட்டுள்ள விசேட பாதுகாப்பு குழு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 4ம் திகதி முதல் 6ம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார்.
இந்நிலையில், இந்தியப் பிரதமரின் வருகையின் போது கொழும்பு மற்றும் அனுராதபுரத்தில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படும் என்று மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பயணத்தின் போது பாதுகாப்பு விடயங்களில் அதிக கவனம் செலுத்துவதை உறுதி செய்ய பொலிஸாருக்கு தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், வருகைக்கான ஆயத்தமாக பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.