போதிய ஆளணியின்றி அல்லல்படும் காரைதீவு பிரதம தபாலகம் !

 





போதிய ஆளணியின்றி  காரைதீவு பிரதம தபாலகம் தனது சேவைகளை செவ்வனே நிறைவேற்ற முடியாமல் திண்டாடுகின்றது.

அங்குள்ள மூன்று கருமபீடங்களில் ஒன்றிலேயே தபால் அதிபர் இருக்கின்றார்.

 ஏனைய இரண்டு கருமபீடங்களும் எந்த நேரமும் வெறிச்சோடி காணப்படுகிறது.

இதனால் அங்கு பலவித தேவைகள் நிமித்தம் செல்கின்ற பயனாளிகள் பல மணி நேரம் தாமதித்து தமது சேவையை பெற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாத காலமாக இந்த அவல நிலை அங்கு நிலவுகிறது.
 
 களவாஞ்சிகுடியைச் சேர்ந்த ஒரு பெண் தபாலதிபர் கடமையில் உள்ளார்.
ஏனைய தர உத்தியோகத்தர்கள் கருமபீட கடமைக்கு இல்லை.
 ஒரு சாதாரண ஊழியர் ஒருவர் சிலவேளை தாமாகவே முன்வந்து சேவை நிமித்தம் வந்து கடமையாற்றுவதை காணக் கூடியதாக இருக்கின்றது .

மொத்தத்தில் காரைதீவு மக்கள் தபாலக சேவையை பெறுவதில் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இது தொடர்பாக கிழக்கு மாகாண தபால் அத்தியட்சகர் கவனம் எடுக்க வேண்டும் என்று காரைதீவு பொதுமக்கள் கேட்டுக் கொள்கின்றார்கள் .
இது விரைந்து நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்று காரைதீவு மக்கள் கேட்டுக் கொள்கின்றார்கள்.
 
 
 ( வி.ரி. சகாதேவராஜா)