மக்களுக்கு தேவையான சரியான அபிவிருத்தி திட்டங்களை இனம் கண்டு ஊழலற்ற ஆட்சியை முன்னெடுக்கும் போது அரசாங்கம் நிதி உதவி செய்ய முன் வரும் என இலங்கைத் தமிழரசு கட்சியின் மாநகர சபை முதன்மை வேட்பாளர் வைத்தியர் இ கருணாகரன் தெரிவித்தார்.
திட்டமிடலுடன் கூடிய அபிவிருத்தி திட்டங்களை சபையில் முன்னெடுக்கும் போது மாநகர சபையில் ஆளுமையுடன் கூடிய வேட்பாளர்களை மக்கள் தெரிவு செய்து அனுப்ப வேண்டும்
நிதி மூலங்கள் காணக்கூடிய இடமாக மாநகர சபை காணப்படுவதால் பாராளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி மூலமும் நாடுகளின் மாநகர சபை நிதி உதவி மூலமும் பல அபிவிருத்தி திட்டங்களை நாம் கடந்த காலங்களில் செய்து காட்டியுள்ளோம்
ஆளும் அரசாங்கத்துடன் சரியான திட்டங்களை நாம் முன்னெடுக்கும் போது அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியும் இன்னும் பல திட்டங்களை நாம் இனம் கண்டுள்ளோம் என
நமது செய்தி பிரிவுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் போது அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்