வரலாற்று
பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயத்தின் வருடாந்த பங்குனி
உத்திரத் திருவிழா (02) புதன்கிழமை ஆரம்பமாகியது.
அன்றிரவு
பிரபல கதாப்பிரசங்கி இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள்
உதவிப் பணிப்பாளரும், கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் பிரிவின் முன்னாள்
உதவிப் பணிப்பாளருமான வானொலிக் கலைஞர் கலைமாமணி கலாபூஷணம் எம்.எஸ்.
ஸ்ரீதயாளன் கதாப்பிரசங்கம் நிகழ்த்தினார்.
முன்னதாக
கலைமாமணி ஸ்ரீதயாளன் அறிமுகம் தொடர்பான வைபவம் ஆலய தர்மகர்த்தா
எஸ்.நமசிவாயம் தலைமையில் நடைபெற்றவேளை விபுலமாமணி வித்தகர்
வி.ரி.சகாதேவராஜா அறிமுவுரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து அம்மனின் மகிமை பற்றி பாடல்களுடன் அருமையாக கதாப்பிரசங்கம் நிகழ்த்தினார்.
இத்திருவிழா பகல் இரவு திருவிழாக்களாக 09 தினங்கள் இடம்பெற்று பத்தாம் நாள் 11 ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடைய இருக்கிறது.
முதல் ஐந்து தினங்களில் கலைமாமணி ஸ்ரீதயாளன் கதாப்பிரசங்கம் நிகழ்த்துவார்.
இவரது கதாகாலாட்சேபம் தினமும் இரவுத் திருவிழாவின்போது இடம்பெறும்.
சிறப்பாக உள்வீதி உலாவுடன் சிறப்பாக நடைபெற்ற இரவுத் திருவிழாவின்போது பெருந்தொகையான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பொதுவாக
மூன்றாம் மாதத்தில் (பங்குனி உத்திரம் ) நிறைய பெண் தெய்வங்களுக்கு
திருமணம் நடந்தது, அதன் படி திருமணம் ஆகி கருவுற்று ஐந்தாவது மாதம் ,
ஏழாவது மாதம் , ஒன்பதாவது மாதம் வளைகாப்பு நடத்துவது வழமை .ஆடிப்பூர
தினத்தை வளைகாப்பு நாளாக கருதி அம்பாளுக்கு அபிஷேகம் செய்து அலங்காரம்
பண்ணி பெரு விழாவாக கொண்டாடுகிறார்கள்,
அந்தவகையில் அம்மனின் திருமண நாளாக பங்குனி உத்திரம் திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.