மட்டக்களப்பு வவுனதீவு பிரதேசத்தில் முற்றாக சேதமடைந்த நிலையில் காணப்படும் பாலம்.







மட்டக்களப்பு  வவுனதீவு மகிழவெட்டுவான் கிராமத்தில் உள்ள பாலமே இவ்வாறு உடைந்து காணப்படுகின்றது. அண்மை நாட்களாக உடைந்த நிலையில் காணப்படும் பாலமானது மகிழவெட்டுவான், கரவெட்டி மற்றும் பல கிராமங்களை உள்ளடக்கிய முக்கிய மார்க்கமான பாலமாகவே இது அமைந்துள்ளது.

தற்போது வரை இப்பாலத்தினூடாக பொதுமக்கள் கனரக  வாகனங்களில் பிரயாணம் செய்ய முடியாத நிலையே காணப்படுகின்றது.  இதனால் கிராம மக்கள் மாற்று வழி ஊடாகவே பல மைல்கள் சுத்தி பயணிக்கும் துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது. இதனால் பொதுமக்கள் பயணிப்பதற்காக நாளாந்தம் பல்வேறு அசௌவ்கரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

விவசாயிகள்  வெள்ளாமை விதைக்கும் காலப்பகுதி தொடங்கியுள்ள நிலையில் உளவு இயந்திரம் மாத்திரம் மாற்று வழியை பயன்படுத்தி ஆறு ஊடான பாதை வழி மார்க்கமாக பயணித்து வருகின்றனர்.

கடந்த வருடம்  இப்பாலம் வெடிப்பு ஏற்பட்டிருந்ததன் பின்னர் மக்கள் பயணித்துக் கொண்டிருந்த நிலையில், முற்றாக தாழுறங்கி காணப்பட்டிருந்தது.  இதனை கவனத்தில் கொண்டு அதிகாரிகள் மாற்று வழியை பயன்படுத்தி தற்காலிக பாலமொன்றையும் அமைத்திருந்தனர். சீரற்ற காலநிலையால் பெய்த கன மழையினால் தற்காலிக பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டு முற்றாக உடைந்த நிலையில் மக்களின் போக்குவரத்து முற்றாக தற்போது வரை கனரக  வாகனங்களில் பிரயாணம் செய்ய முடியாத நிலையே காணப்படுகின்றது.

 பாலம்  இதுவரை புணரமைக்காமல் இருப்பதனால் உரிய அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு புதிய பாலம் ஒன்றை அமைத்து தருமாறு மகிழவெட்டுவான் கிராம  பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.