இயந்திர படகு சேவை போக்குவரத்து மீளத்திருத்தியமைக்கப்பட்டு மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 


மட்டக்களப்பு மாவட்ட கோறளை பற்று தெற்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட திகிலிவெட்டை கிராமத்திற்கான இயந்திர படகு சேவை போக்குவரத்து  மீளத்திருத்தியமைக்கப்பட்டு வியாழக்கிழமை(24) அன்று மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சந்திவெளி பகுதியில் இருந்து கிரான் பிரதேச செயலக திகிலிவெட்டை கிராமத்திற்கு இயக்கப்பட்ட இப்பாதையில் ஏற்பட்ட பழுதுகள் காரணமாக கடந்து 8 மாதமாக போக்குவரத்து சேவை இயக்கப்படவில்லை. பிரதேச சபையினால் 22 லட்சம் ரூபாய் நிதிப்பங்களிப்பில் முலம் பாதை மீளத்திருத்தியமைக்கப்பட்டது

எனவே, குறித்த பகுதி மக்கள் நீண்ட தூரம் பயணித்து நகர் புறத்தை சென்றடைய வேண்டிய தேவை இருந்தது. குறித்த பாதையை திருத்தி அமைக்கப்பட்டதை தொடர்ந்து

 பிரதேச செயலாளர் கா.சித்திரவேல் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் க. பார்த்தீபன் மற்றும்  கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் திரு. ராஜ்கீரன்   முன்னிலையில் வியாழக்கிழமை (24) அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

. விஜயரெத்தினம்