யார் இந்த சுசீலா ராஜா ? இலங்கை மாதா ஈன்ற ஒரு சிங்கப்பெண் ஆக மட்டு நகர் மக்கள் கொண்டாடுவது ஏன் ?




 




















































திருமதி சுசிலா ராஜா தனது வாழ்வில் பெரும் பகுதியினை வெளிநாட்டில் கழித்தாலும் பிறந்த மண்ணுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என  எண்ணி  2002இல் மீண்டும் இலங்கையில் தடம்  பதித்தார்.

எண்ணற்ற அரச சார்பற்ற  நிறுவனங்களுடன் இணைந்து தன்னலமற்ற சேவைகளை ஆரம்பித்தார்.

 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட இயற்கையின் சீற்றத்தினால் நிலைகுலைந்த இளைஞர் யுவதிகளை தூக்கி நிறுத்த அரும்பாடு பட்டார் .
 co-counselling  எனும் ஆற்றப் படுத்துகை
 முறையினை அறிமுகம் செய்து ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களின் இதயங்களை மலரச்   செய்தார்,  .எந்த எதிர்பார்ப்புமின்றி பெறுமதி மிக்க சான்றிதழ்களை அனைவருக்கும்   வழங்கி  அனைவரது  வாழ்விலும் ஒளியூட்டினார் .

 அவரால் உருவாக்கடைந்த  எத்தனையோ ஆற்றப் படுத்துவோர்கள்  இன்னும் தங்களது சேவைகளை  செவ்வனே  செய்து வருவதும்  குறிப்பிடத்தக்கது .

அத்துடன் நின்றுவிடாமல்  "SNERGY"  என்னும் நிறுவனத்தை ஆரம்பித்து எண்ணற்ற குழந்தை செல்வங்களுக்கு கல்வி வழங்கினார், இதன் மூலம்  மூலம் பல வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி   அனைவரினதும் பாராட்டை பெற்றுக்கொண்டார் .

.ஒவ்வொருவரினதும்   வாழ்வினையும் நெறிப்படுத்த தியானங்கள், இறை  வழிபாடுகள் நோய் நிவாரண முறைகள் என்பவற்றையும்  பெரிதளவில்  அறிமுகப்படுத்தினார்.
அவர் ஆற்றிய சேவைகளை ஓரிரு  வரிகளில் உரைத்திட  முடியாது  என்பது மறுக்க  முடியாத உண்மை.
அவ்வாறு பல்வேறு சேவைகளை  தொடர்ந்தும் செய்துவருகின்ற  இந்த வைர
பெண்ணை  கௌரவிக்கும் விழா   மட்டக்களப்பு கல்லடி விமோச்சனா இல்ல பணிப்பாளர் திருமதி செல்விகா  சகாதேவன் தலைமையில் இடம் பெற்றது .
நிகழ்வுக்கு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்
திருமதி சுதர்சினி ஶ்ரீகாந்த் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார் .
திருமதி சுசிலா ராஜாஅவர்களின்  சேவைகளை பாராட்டி அதிதிகளால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார் .
நிகழ்வுக்கு பயனாளிகள் , சமூக ஆர்வலர்கள் , பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர் .