தேசிய மக்கள் சக்தியின் மாந்தை மேற்கு ஆண்டான்குளம் வேட்பாளர் மீது மது போதையில் தமிழரசுக் கட்சி வேட்பாளர் உட்பட இணைந்த குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்று (15.04) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டக்கண்டல் வேட்பாளர் உட்பட சிலர் மாந்தை கிழக்கு ஆண்டான்குளம் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் அடம்பன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். எமது கட்சி வேட்பாளர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.