இம்முறை நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபை தேர்தலில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபைக்கு போட்டியிடும் இலங்கை தமிழரசு கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு முறக்கொட்டான்சேனையில் நடைபெற்றது.
இதன்போது இலங்கை தமிழரசு கட்சி மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், வேட்பாளர்கள் தமிழரச கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
முதலில் அனைவரும் முறக்கொட்டான்சேனை முத்துமாரியம்மனின் அருளாசி வேண்டியதுடன் மக்கள விளக்கேற்றி மென இறைவணக்கத்துடனும் உயிர் நீத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
தொடர்ந்து தேர்தலில் போட்டியிடும் கோறளைப்பற்று வட்டராத்திற்கான வேட்பாளர்கள் அனைவரும் நிகழ்வில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களால் மலர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு வாழ்த்து தெரிவித்து மக்கள் முன்னிலையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன் மற்றும் வைத்தியர் இ.சிறிநாத் ஆகியோர்கள் உரையாற்றினார்கள்.
ந குகதர்சன்