

மட்டக்களப்பு திராய்மடு பிரதேசத்தில் அமைந்துள்ள மௌண்டன் கிட்ஸ் பாலர் பாடசாலையின் அதிபர் திருமதி மகீமா நந்தகுமார் தலைமையில் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் நேற்றைய தினம் 25.04.2025 வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலய முன்பிள்ளை பருவ உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.அனுரேகா விவேகானந்தன் , மாவட்ட முன்பிள்ளை பருவ அபிவிருத்தி இணைப்பாளர் திரு.வீ.முரளிதரன், மாவட்ட உளவள துணை இணைப்பாளர் திருமதி உ.சுபாநந்தினி, சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் A.J.சியாம்,மற்றும் மட்டக்களப்பு மக்கள் வங்கி முகாமையாளர் திரு.ப.தயாயுதன் , மக்கள் வங்கி உத்தியோகத்தர்கள் கெலினா நிலக்ஷினி,வே.சிவம், மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், பிள்ளைகள் கலந்து சிறப்பித்தனர்.அத்துடன் மக்கள் வங்கியில் பிள்ளைகளுக்கான “இசுறு தான்”சேமிப்பு கணக்கு ஆரம்பிக்கப்பட்டு பரிசில்கள் வழங்கப்பட்டது.புத்தாண்டு நிகழ்வுகளாக பிள்ளைகளுக்கு கைவிஷேசம் வழங்கப்பட்டு புத்தாண்டு விளையாட்டுகள் இடம்பெற்றன.
சித்திரை புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுக்கு சிறார்களின் பெற்றோர்கள் , பிரதேச பொது மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்