அனுரகுமார திஸாநாயக்கவின் குடும்ப பரம்பரையே தலதாவை பாதுகாத்த கீரவெல்ல சந்ததியினர் - சமூக ஊடக செயற்பாட்டாளருமான லால் பெரேரா

 


தேசிய மக்கள் சக்தி கட்சியின் பலமான ஆதரவாளரும் யூடியூப் சமூக ஊடக செயற்பாட்டாளருமான லால் பெரேரா (பாணதுரே லால்) ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் குடும்ப பரம்பரை பற்றி வரலாற்றை சமூகமயப்படுத்தியுள்ளார்.

ஜனதா விமுக்தி பெரமுனவின் தலைவரும்,தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரும்,இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்டவருமான அனுரகுமார திஸாநாயக்கவின் குடும்ப பரம்பரையே தலதாவை பாதுகாத்த கீரவெல்ல சந்ததியினர் என சமூகவலைத்தளங்களில் காணொளியுடன் இதனை முன்வைத்துள்ளார்.

திசாநாயக்க முதியலன்ச தலைமுறை கீரவெல்ல தலைமுறையைச் சேர்ந்தது என்றும், அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கீரவெல்ல தலைமுறையின் மரபு இருந்ததனால் தான் பல வருடங்களின் பின்னர் தலதா கண்காட்சியை நடத்த நினைத்து மகாநாயக்க தேரர்களின் அங்கீகாரத்தைப் பெற்றதாகவும் லால் பெரேரா கூறுகிறார்.

இது தொடர்பாக லால் பெரேரா வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

16 வருடங்களின் பின்னர் நடைபெறவுள்ள தலதா கண்காட்சியின் ஆரம்ப நாளுக்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் லால் பெரேரா இந்த கண்டுபிடிப்பை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.