மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளீர் கல்லூரி அதிபர் திருமதி நவகீதா தர்மசீலன் முப்பத்தி ஏழு வருட கல்விச் சேவையில் இருந்து ஓய்வு பெறுகிறார்.


 





























FREELANCER

 

 கிழக்கின் மண்டூர் கிராமத்தை பூவீகமாக கொண்ட மட்டக்களப்பு விவேகானந்தா மகளீர் பாடசாலை      அதிபர் திருமதி நவகீதா தர்மசீலன் அவர்கள்   முப்பத்தி ஏழு  வருட கல்விசேவையில் இருந்து ஓய்வு  பெறுகிறார்.
ஆரம்ப கல்வியை மண்டூர் இராம கிருஷ்ண  வித்தியாலயத்திலும் , இடை நிலைக்கல்வியை மட் /வந்தாறுமூலை மத்திய கல்லூரியிலும் உயர்தரக்கல்வியை விஞ்ஞானப்பிரிவில் மட் /சிவானந்தா தேசிய பாடசாலையிலும் கற்றார் .
மண்டூர் மகா வித்தியாலயத்தில் 1980.இல் விஞ்ஞான ஆசிரியராக முதல் நியமனம் பெற்று தனது ஆசிரியர் பணியை ஆரம்பித்தார்
2008. இல் மட் / குடியிருப்பு கலைமகள் வித்தியாலயத்தில் கல்வி கற்பித்தார்,  அதனைத் தொடர்ந்து  இலங்கை ஆசிரியர் சேவை தரம் -II இல்  நியமனம் பெற்று மட் /அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலயத்தில்  பிரதி அதிபராக பொறுப்பேற்று 2012. இல் அதே பாடசாலையில் பதவி உயர்வு பெற்றார் .
2015.ம் ஆண்டு  SLPS தரம் I. அதிபராக பதவி உயர்த்தப்பட்டார் .
2019 ம் ஆண்டு முதல் கல்லடி உப்போடை மட்டக்களப்பு விவேகானந்தா மகளீர் கல்லூரி
அதிபராக நியமனம் பெற்று தொடர்ச்சியாக 06. வருடங்கள் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி இன்றைய  தினம் 2025.04.25  முப்பத்தி ஏழு  வருட கல்விசேவை பூர்த்தி செய்து ஓய்வு பெற்று செல்கிறார் . அதிபர் அவர்கள் 1C. தரத்தில்  உள்ள பாடசாலை அதிபர்களுக்கான "குரு பிரதீபா" தேசிய விருதை 03. ஆண்டுகள்  பெற்றுக்கொண்டது குறிப்பிட்ட தக்கதாகும்

பாடசாலை கலாசார மண்டபத்தில் ஓவ்வு பெற்ற அதிபரின் சேவையினை பாராட்டி  மாணவர்களாலும் , ஆசிரியர்களாலும் மற்றும்  கல்வி சமூகத்தாலும்  கௌரவிப்பு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது . இதன் போது பொன்னாடை போர்த்தி , கவிதைகள் வாசிக்கப்பட்டு , நினைவுப்பரிசுளும் வழங்கி வைக்கப்பட்டன .