கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தமிழ்- சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் வெளியிடப்படும்.

 


கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தமிழ்- சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் வெளியிடப்படும் என்று  பரீட்சை ஆணையாளர் நாயகம்  எச்.ஜே.எம்.சி.அமித் ஜயசுந்தர திங்கட்கிழமை (07) அன்று  தெரிவித்தார்.

நாடு முழுவதும் சுமார் 2,312 மையங்களில் பரீட்சை நடத்தப்பட்டது.

மொத்தம் 333,183 பேர் பரீட்சை எழுதினர், அவர்களில் 253,390 பேர் பாடசாலை மாணவர்கள் மற்றும் 79,793 பேர் தனியார் மாணவர்கள் ஆவர்.