மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உள்ள ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபியில் இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் நினைவஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது.

 






























ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி இது தொடர்பான உறுதியான நிலைப்பாடுகளை கூறி இருக்கின்றார்கள். அவர்களுடைய இந்த விடயத்திற்கு நாங்கள் முழுமையாக ஆதரவினையும் முழுமையான ஒத்துழைப்பையும் வழங்க தயாராக இருக்கின்றோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத் தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டு தாக்குதலில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூறும் முகமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

இன்றைய தினம் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உள்ள ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபியில் இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் நினைவஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது.