இலங்கை நிர்வாக சேவையின் முதல் தர அதிகாரியான வேதநாயகம் ஜெகதீசன் சிவில் விமான சேவைகள் பிரிவின் மேலதிக செயலாளராகவும் நியமனம்!
போக்குவரத்து,
பெருந்தெருக்கள், துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் அமைச்சில்
போக்குவரத்து பிரிவின் மேலதிக செயலாளராக (அபிவிருத்தி) கடமையாற்றிய இலங்கை
நிருவாக சேவையின் முதலாம் தர அதிகாரியான வேதநாயகம் ஜெகதீஸன் 2025.04.08
ஆம் திகதி தொடக்கம் செயற்படும் வண்ணம் துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள்
பிரிவின் மேலதிக செயலாளராகவும் (நிருவாகம், நிதி) நியமனம்
செய்யப்பட்டுள்ளார்.
கல்முனை
பாண்டிருப்பைச் சேர்ந்த இவர் அம்பாறை மாவட்டத்தில் பல பிரதேசங்களிலும்
பிரதேச செயலாளராக சேவையாற்றி இறுதியில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க
அதிபராக சிறப்பாக சேவையாற்றியவராவார் என்பது குறிப்பிடத்தக்கது.
( வி.ரி.சகாதேவராஜா)