ஆயிரம் தமிழ் சொற்களுக்கு அதன்ஆங்கிலஅர்த்தங்களை சாதாரணமாக கூறிய சாவகச்சேரியை சேர்ந்த இரண்டரை வயதுடைய சிறுமி சாதனை படைத்துள்ளார்.
சாவகச்சேரியை சேர்ந்த ஜெயகரன் தர்ஷ்விகா என்ற இரண்டரை வயதுடைய சிறுமி காலநிலை, விலங்குகள், மின்னியல் சாதனங்கள், தொழில்கள் உள்ளிட்ட 1000 இற்கும் அதிகமான பெயர்களை தமிழில் கேட்கும் போது அவற்றுக்கான ஆங்கில அர்த்தங்களை மிகவும் அசாத்தியமாக கூறுகின்றார்.
தந்தையார் முச்சக்கர வண்டிஓடுனராகவும் தாயார்குடும்ப பெண்ணாகவும் கொண்டபெரியஅளவிலான பின்புலங்கள் இல்லாதகுடும்பத்தில் பிறந்தகுறித்த குழந்தையானது இதுவரைஏடுதொடக்க பாடாத நிலையில் இவ்வாறு அதி சிறந்த ஞாபகசக்தியை கொண்டுள்ளமையானது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் யாழ்ஊடகஅமையத்தில் இவ்விடயம் குறித்து ஊடகசந்திப்பொன்றை பெற்றோர் முன்னெடுத்திருந்த துடன்குறித்த சிறுமியின் அசாத்திய திறனைவெளிக்கொண்டு வருவதுடன் அந்தஆற்றலைஉலகசாதனைப் புத்தகத்தில் பதியப்படுவதற்கான முயற்சியை பெற்றோர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.