அட்சய திருதியை நாளையதினம் கொண்டாட நகைப்பிரியர்கள் நகைகளை கொள்வனவு செய்வதற்கு உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர்.

 


அட்சய திருதியை தினம் நாளையதினம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் நகைப்பிரியர்கள் நகைகளை கொள்வனவு செய்வதற்கு தயாராகி வருகின்றனர்.

அந்தவகையில் இலங்கையில் தங்கத்தின் விலையானது  சில மாதங்களாக அதிகரிப்பை பதிவு செய்திருந்த நிலையில்  இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 999, 982 ரூபாவாக காணப்படுகின்றது.

அதன்படி, 24 கரட் தங்க கிராம் 35,280 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் 282,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்க கிராம் 32,340 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் 258,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை  30,870 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 247,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.