சுகாதார அமைச்சினால் பிராந்திய ரீதியில் சிறப்பாக பணியாற்றிய செய்தியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு .









 


















மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் பொது மக்களுக்கு தேவையான சிறப்பான  சுகாதார மேம்பாட்டு நலசெய்திகளை வெளியிட்ட  பிராந்திய செய்தியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு பிராந்திய  சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் ஆர் முரளீஸ்வரன் தலைமையில்  இடம்பெற்றது.


மாவட்டத்தில் சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்படும் விசேட சுகாதார சேவைகள் சம்பந்தமாகவும் கிளீனிங் ஸ்ரீலங்கா திட்டங்கள் சம்பந்தமாகவும் மக்களுக்கு தெரிய வேண்டிய அத்தியாவசிய சேவைகள் பற்றிய ஊடகத்துறை யினர் உடனான கலந்துரையாடலின் போது    பிராந்திய   செய்தியாளர்களுக்கு சான்றிதழ்கள்  வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

 எமது    BATTI MEDIA செய்தி பிரிவின்  பிரதான ஊடகவியலாளர்  வரதராஜன்  மற்றும்  ஊடகவியலாளர் அலெக்ஸ் அவர்களும் கௌரவிக்கப்பட்டார்கள்.
 

இந்நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய  சுகாதார சேவைகள் அலுவலக உயர் அதிகாரிகள் வைத்தியர்கள் பிரதேச ஊடகவியலாளர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.