இலங்கை தமிழரசுக்கட்சி நாவிதன்வெளி பிரதேச வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டமும் மாபெரும் பொதுக் கூட்டமும் நடைபெற்றது.
நாவிதன்வெளி பிரதேச இலங்கைத்தமிழரசு கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வும் மாபெரும் பொது கூட்டமும் முன்னாள் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் தலைமையில் நாவிதன்வெளி சுபமங்களா மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன்( கட்சியின் பதில் செயலாளர்), இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், டாக்டர் இ.சிறிநாத் மற்றும் கவி.கோடீஸ்வரன் ஆகியோர் பிரதான அதிதிகளாக கலந்து சிறப்பித்தார்கள்.
கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளர் அ.நிதான்சன் உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இ.ரூபசாந்தன், எஸ். சுதர்சன் உள்ளிட்ட வேட்பாளர்கள் அறிமுகம் இடம்பெற்றதோடு கட்சி மாலையும் அணிவிக்கப்பட்டது.
இடம்பெற்றது. கூடவே
ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.
(வி.ரி.சகாதேவராஜா)