ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்பு முதல் தடவையாக எதிர்வரும் சனிக்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் செய்ய உள்ளார்
இதனை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் அவரது வருகையை அறிவிக்கும் பதாகைகள் கட்சியினால் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது இவை தேர்தல் விதிமுறைகளுக்கு முரணானது என முறைப்பாடு கிடைத்ததை அடுத்து மாவட்ட தேர்தல் கண்காணிப்பு குழுவுக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து
நேற்று இரவு மாவட்ட போலீசாரினால் இப்பதாதைகள் அகற்றும் பணிகள் மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எம் சுபியான் தலைமையில் பணிகள் முன்னெடுக்கப்பட்டது மாவட்ட செயலக தேர்தல் கண்காணிப்பு குழு உயர் அதிகாரிகளும் இதன் போது பிரசன்னமாகி இருந்தனர்