இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது, வீதியைச் சூழவுள்ள பகுதிகளில் இருந்து தெரு நாய்களை அகற்றுமாறு இலங்கை அரசாங்கம் சுற்றறிக்கை விடுத்துள்ளது
குறித்த விடயத்திற்கு விலங்குகள் நல அமைப்புகளும் ஆர்வலர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது விலங்குகள் நலனுக்கு எதிரானது, நெறிமுறையற்றது, விலங்குகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கிறது மற்றும் நீண்டகால மனித நாய் மேலாண்மை திட்டங்களை மீறுகிறது என எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்