வரதன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு தகுதி பெற்றவர்களுக்கான வாக்கு சீட்டுக்களை மாவட்ட தேர்தல் திணைக்களத்தினால் தபால் திணைக்களத்திற்கு கையளிக்கும் நிகழ்வு இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர் எம் சுபியான் தலைமையில் இடம் பெற்றது
மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜேஜே முரளிதரன் கலந்து கொண்டு முன்னெடுக்கப்படும் தேர்தல் பணிகளை பார்வையிட்டதுடன் இன்று முதல் கட்டமாக மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகளுக்கான 3100 வாக்குச்சீட்டுகளை உரிய தபால் மூல வாக்களிப்பிற்காக வழங்கி வைத்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 11 554 பேர் தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
இன்றைய இந்த தேர்தல் கடமைகளின் போது
மாவட்ட பிரதான தபால் நிலையத்தின்நிலையத்தின் உயர் அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்