ஆரையம்பதி ஆரையூர் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாபெரும் சித்திரை திருவிழா நிகழ்வு.












தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆரையம்பதி ஆரையூர் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் கிராமிய விளையாட்டு நிகழ்வுகள் ஆரையூர் விளையாட்டு கழகத்தின் தலைவர் யுதிக்சன் தலைமையில்  ஞாயிற்றுக்கிழமை ஆரையூர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் அதிதிகளாக ஆரையூர் கிராம உத்தியோகத்தர், கந்தசுவாமி கோவில் குருக்கள், கோவில் நிர்வாகத்தினர், விளையாட்டு கழகத்தின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இத்திருவிழா நிகழ்வில் கயிறு இழுத்தல், முட்டி உடைத்தல், தலையனைச் சமர் போன்ற பல கிராமிய விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.

நிகழ்வில் பல போட்டியாளர்கள் கிராமிய விளையாட்டுகளில் பங்கேற்று பார்வையாளர்களின் பாராட்டை பெற்றதுடன் நிகழ்வின் இறுதியில் போட்டியின் வெற்றியாளர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

ஏ.எஸ்.எம். நுஸைப் (ஏறாவூர்)