அனுராதபுரத்தில் இஷாரா செவ்வந்தியை போன்ற பெண் ஒருவர் போதைப் பொருளுடன் கைது.

 



கணேமுல்ல சஞ்ஜீவ படுகொலைக்கு தொடர்புடையவராகவும், தற்போது தலைமறைவாக உள்ளவருமான இஷாரா செவ்வந்தி என்ற பெண், அனுராதபுரம் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, அவரது தோற்றத்திற்கு மிகவும் ஒத்த தோற்றமுடைய பெண்ணொருவர் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான சஞ்ஜீவ குமார சமரரத்ன என்று அழைக்கப்படும் கணேமுல்ல சஞ்ஜீவ என்பவரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி குறித்து துல்லியமான தகவல் வழங்குபவருக்கு 12 இலட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.