400
வருடங்கள் பழமை வாய்ந்த மட்டக்களப்பு ஆரையம்பதி செங்குந்தர் வீதி
அருள்மிகு ஸ்ரீ திருநீலகண்ட விநாயகர் ஆலய கன்னி பங்குனி உத்திர மகோற்சவம்
கடந்த புதன்கிழமை (2) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது .
மகோற்சவ
பிரதம குரு கிழக்கின் பிரபல சிவாச்சாரியார் கிரியாதிலகம் தத்துவ நிதி
விபுலமணி சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் தலைமையில் கிரியைகள் சிறப்பாக
நடைபெற்று வருகின்றன .
சாதகாசிரியராக சிவ ஸ்ரீ நித்திய ரூபன் குருக்கள் ஈடுபடுகிறார்.
தொடர்ச்சியாக 10 தினங்கள் காலை மாலை திருவிழாக்கள் இடம் பெற்று பத்தாம் தேதி வியாழக்கிழமை தேரோட்டம் இடம்பெறும்.
மறுநாள் 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை தீர்த்தோற்சவம் இடம்பெற இருக்கிறது.
400
வருடங்கள் பழமை வாய்ந்த இவ்வாலயத்தில் முதலாவது கும்பாபிஷேகம் கடந்த
வருடம் பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் தலைமையில் சிறப்பாக
இடம்பெற்று, இந்த வருடம் முதன் முதலில் கொடியேற்றத்துடன் முதலாவது
மகோற்சவம் தற்பொழுது இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
(வி.ரி.சகாதேவராஜா)