தமிழ் சிங்கள புத்தாண்டை சிறப்பிக்கும் முகமாக வாழைச்சேனை புதுக்குடியிருப்பு கலைவானி கலை மன்றத்தினால் பாரம்பரிய விளையாட்டு மற்றும் கலை கலாச்சார நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது

 


தமிழ் சிங்கள புத்தாண்டை சிறப்பிக்கும் முகமாக வாழைச்சேனை புதுக்குடியிருப்பு கலைவானி கலை மன்றத்தினால் வருடாவருடம் பாரம்பரிய விளையாட்டு மற்றும் கலை கலாச்சார நிகழ்வும் இடம் பெறுகின்றது.

அந்த வகையில் 2025ம் ஆண்டின் தமிழ் சிங்கள புத்தாண்டை சிறப்பித்து தலைவர் சு. சுதர்ஜன் தலமையில் வாழைச்சேனை கலைவாணி கலை மன்றத்தினால் பாரம்பரிய கலை கலாச்சார நிகழ்வும், தரம் 5 புலமைபரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களையும் அதனோடு ஒட்டி க.பொ.த.சா.தரம் மற்றும் உயர்தரம் அதி சிறந்ந பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை கௌரவித்தல் நிகழ்வும், அத்தோடு இந்தியா கேரளா மாநிலத்தில் இடம்பெற்ற கபடிப் போட்டியில் 1 ஆம் இடம்பெற்ற மாவட்ட மண்ணிற்கு பெருமை சேர்த்த கிரான் கருணா ஜக்கிய விளையாட்டு கழக கபடிப் போட்டி வீராங்கனைகளுக்கான கௌரவிப்பு நிகழ்வும் இடம் பெற்றது.

 இந்திகழ்வில் கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் திரு.ராஜ்கீதன் கலந்து சிறப்பித்ததுடன் பல தொழிலதிபர்கள் மற்றும் சமூக சேவையாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.