மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ பொதுமக்கள் தவக்காலத்தின் பெரிய வெள்ளி யை
முன்னிட்டு மட்டக்களப்பில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று காலை
சிலுவைப் பாதை பாடுகளின் வழிபாடுகள் இன்று பலத்த பாதுகாப்புடன் முன்னெடுத்தனர் .
இதேவேளை மட்டக்களப்பில் உள்ள சீயோன்
தேவாலயத்திலும் இன்று காலை தேவாலயத்தின் பிரதான போதகர் ரோஷான் மகேசன்
தலைமையில் தலைமையில் பெரிய வெள்ளி சிலுவை பாதை வழிபாடுகள்
முன்னெடுக்கப்பட்டது
இயேசுபிரான் சிலுவையில் அடையப்பட்ட பாடுகளின் காட்சிகளும் இன்றைய பெரிய வெள்ளி வழிபாடுகளில் முன்னெடுக்கப்பட்டது
பெரிய வெள்ளியின் மகத்துவம் பற்றி ஆலய பிரதம போதகர் இங்கு விசேட உரையாற்றினார் .
வழிபாடுகளில் அதிக அளவிலான கிறிஸ்தவ பொதுமக்கள் கலந்து கொண்டனர்.