கேரள கஞ்சாவுடன் குடும்பப் பெண் ஒருவர் நேற்றைய தினம் கைது..

 


கிளிநொச்சியில் கேரள கஞ்சாவுடன் குடும்பப் பெண் ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து குறித்த பெண்ணின் வீடு சோதனைக்குட்படுத்தப்பட்டது.

இதன்போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு கிலோ கேரளா கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியதுடன் வீட்டின் உரிமையாளரான பெண்ணையும் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.