வாகரை கலாசார மண்டபத்தில் கதிரவனின் வீதி நாடகம்.









நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமை எனும் கருப்பொருளில் கதிரவன் கலைக் கழகத்தின் வீதி நாடகம் வாகரை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

கோறளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தெரிவு செய்யப்பட்ட தமிழ் முஸ் லிம் பெண் தொழில் முயற்சியாளர்கள் பார்வையாளர்களாக பங்குபற்றிய இவ் விழிப்புணர்வு வீதி நாடகத்தில் பல்வேறு சமூகச் சீரழிவுகளுக்கான தீர்வுகள் முன்வைக்கப்பட்டன.

கதிரவன் த.இன்பராசாவின் நெறியாள்கையில் இதுபோன்ற விழிப்புணர்வு வீதி நாடகங்கள் கிழக்கு மாகாணத்தின் ஒவ்வொரு கிராமங்களிலும் நிகழ்த்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.