மட்டக்களப்பு மாவட்ட அரசாங்கஅரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா யுலேக்கா முரளிதரன் அவர்களினால் கல்லடி பழைய பாலத்திற்கு அருகாமையில் சுய தொழில் முயற்சியாளர்களின் "பாடுமீன் சந்தை" விற்பனைக் கண்காட்சி நேற்று மாலை திறந்துவைக்கப்பட்டது.
மட்டு சுயதொழில் முயற்சியாளர்கள் சம்மேளனமானது சுய தொழில் முயற்சியாளர்களது மேம்பாடு மற்றும் சமூக மேம்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு கடந்த ஒரு வருட காலமாக மட்டக்களப்பு மாவட்டம் பூராகவும் திறம்பட சேவையாற்றி வருகின்றது.
சம்மேளனத்தின் செயற்பாடுகளி ஒரு அங்கமாக மாவட்டத்தில் சுயதொழில் முயற்சியாளர்களுக்கான சந்தை வாய்ப்பு மிகவும் அரிதாக காணப்படுவதனை கருத்திற் கொண்டு சுயதொழில் முயற்சியாளர்களிற்கு நிரந்தர சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் முகமாக கல்லடி பழைய காலத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள கல்லடி பிறிஜ் மார்க்கெட்டில் வாராந்தம் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் பூரணை தினங்களில் மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை மாலை நேர "பாடு மீன்" விற்பனைச் சந்தையினை தொடர்ச்சியாக நடத்துவதற்கு திட்டமிட்டு அதனை நடைமுறைப்படுத்தும் வண்ணமே குறித்த சந்தை நேற்றைய தினம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இச்செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகம், மண்முனை வடக்கு பிரதேச செயலகம் ஆகிய அரச நிறுவனங்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்குவதனால் இச்செயற்றிட்டத்தினை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்வதற்கான ஆரம்ப நிகழ் நேற்று 13.04.2025 திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5.00 மணிக்கு அரசாங்க அதிபரினால் திறந்து வைக்கப்பட்டது.
சம்மேளனத்தின் தலைவர் "சாமஸ்ரீ தேசமான்ய உ.உதயகாந்த் (JP) தலைமையில் இடம்பெறவுள்ள திறப்பு விழா நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா ஜூலேகா முரளிதரன் அவர்கள் கலந்து கொண்டு நாடா வெட்டி குறித்த மாலை நேர சந்தையினை உத்தியோகபூர்வமாக
ஆரம்பித்து வைத்தார்.
அத்தோடு இந்நிகழ்விற்கு விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் உதவி அரசாங்க அதிபர் ஜீ.பிரணவன், மட்டக்களப்பு வர்த்தக சம்மேளனத்தின் தலைவரும் மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவருமாகிய தேசபந்து முத்துகுமார் செல்வராசா, சமாரிற்றன் பேஸ் நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் முயற்சியாண்மை அபிவிருத்தி பயிற்சி உத்தியோகத்தர் நிலோசன், சம்மேளன பிரதிநிதிகள் உள்ளிட்ட மேலும் பலர் கலந்து சிறப்பித்ததுடன், இதன் போது சம்மேளனத்தின் இரண்டு சுய தொழில் முயற்சியாளர்களுக்கு புதிய தொழில் முயற்சியினை ஆரம்பிப்பதற்கான
அன்பளிப்பாக தலா 25,000/= வீதம் சம்மேளனத்தின் ஆலோசகரும் மட்டக்களப்பு வர்த்தக சம்மேளனத்தின் தலைவரும் மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவருமாகிய தேசபந்து முத்துகுமார் செல்வராசா அவகளின்அவகளின் சொந்த நீதியில் இருந்து வழங்கி வைக்கப்பட்டதுடன், குறித்த சம்மேளனத்தின் முயற்சிக்கு சமாரிற்றன் பேஸ் நிறுவனத்தினால் சுமார் 60,000/= பெறுமதியான மின் பிறப்பாக்கி இதன் போது வழங்கி வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.