கடுகஸ்தொட்டை பாலத்திலிருந்து தண்ணீருக்குள் குதித்த இளம் பெண்ணை, ஒரு
பொலிஸ் அதிகாரி தனது உயிரை பணயம் வைத்து காப்பாற்றினார் என்ற செய்தி
இலங்கையின் அரச சேவையின் அலட்சியங்களுக்கு மத்தியில் மகிழ்ச்சியை தருகிறது.
அப்பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த 103984 ஆம் இலக்க
பொலிஸ் கான்ஸ்டபிள் ஹேரத், அந்த பெண் ஆற்றில் குதித்த தகவல் கிடைத்ததும், உடனடியாக
செயல்பட்டு, பாலத்திலிருந்து தானும் குதித்து அந்த பெண்ணை காப்பாற்றியுள்ளார்.
அவரது இந்த துணிகரத் தியாகத்தை பாராட்டியே ஆக வேண்டும்.