திருக்கோவிலில் கலாசார பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்தோருக்கு சான்றிதழ்கள்.



புத்தசாசன மற்றும் மத கலாசார அலுவல்கள்  அமைச்சின் திருக்கோவில் கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்ற பல்வேறு பயிற்சி நெறிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நிலையத்திற்கு பொறுப்பான எஸ்.ரவீந்திரன்  தலைமையில் கடந்த புதன்கிழமை(3)  இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன்  கலந்து சிறப்பித்தார் .
 ஏனைய அதிதிகளாக உதவி பிரதேச செயலாளர் திருமதி.எஸ்.நிருபா நிருவாக உத்தியோகத்தர் டி.மங்களா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் பொதுமக்கள்  மாணவர்கள் ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
 
 


( வி.ரி.சகாதேவராஜா)