இலங்கையின் மிக நீண்ட யாழ்ப்பாணம் கதிர்காமம் பாதயாத்திரை மே மாதம் 30 ஆம் தேதி ஆரம்பமாகிறது.
யாழ்.செல்வச்சந்நதி
ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகும் ஜெயா வேல்சாமி தலைமையிலான மிக நீண்ட 59
நாள் பாதயாத்திரை யூலை மாதம் 26ஆம் திகதி கதிர்காமத்தை சென்றடையும்.
அதற்கான முன் ஏற்பாடு ஒழுங்கு நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்
புனித பாதயாத்திரைக் குழுவில் பக்திபூர்வமான முறையில் பங்குபெறவிரும்பும்
அடியவர்கள் ( 0763084791 ) குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை
மேற்கொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளமுடியும் என் தலைவர் ஜெயா
வேல்சாமி தெரிவித்தார்.
மகிமைகள்
பொருந்திய இவ்வருட 2025 கதிர்காம ஆடிவேல் விழா உற்சவம் ஜூலை 26ம் திகதி
சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டு ஆகஸ்ட் 9ம் திகதி சனிக்கிழமை
தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
( வி.ரி.சகாதேவராஜா)