மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிக்கும் பணிகள் அமைதியான முறையில் திணைக்களங்களில் நடைபெற்றுவருகின்றது.

 

 

 


 

 






மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூலம்    உள்ளூராட்சி மன்றத்    தேர்தலில்    வாக்களிக்கும் பணிகள் அமைதியான முறையில் திணைக்களங்களில் நடைபெற்றுவருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள திணைக்களங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களில் இன்று காலை தொடக்கம் வாக்களிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
 மட்டக்களப்பின் புதிய மாவட்ட செயலகம் உட்பட அனைத்து பிரதேச செயலகங்கள் ,திணைக்களங்களில் இன்று காலை முதல் அரச ஊழியர்கள் வாக்களிக்கும் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 11554 அரச ஊழியர்கள் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவித்தாட்சி அதிகாரியுமான திருமதி ஜஸ்டினா  முரளிதரன் தெரிவித்தார்,
இன்றும் நாளை வெள்ளிக்கிழமையும் அரச ஊழியர்கள் வாக்களிக்கமுடியும் எனவும் அதில் தவறுவோர் எதிர்வரும் 28,29ஆம் திகதிகளில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேபோன்று இன்று காலை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களிலும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் வாக்களிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

  வரதன்