கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைக்கு தியாவட்டவான் வட்டாரத்தில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் புஹாரி பெளர்தீன் தன் மீது எதிர்க்கட்சி வேட்பாளர் தாக்குதல் மேற்கொள்ள முற்பட்டதாகக்கூறி வெள்ளிக்கிழமை வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று ஜும்ஆ தொழுகையின் பின்னர் நாவலடி, மதீனா பள்ளிவாயலுக்கு முன்பாக இடம்பெற்றுள்ளதுடன், இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படுமென முறைப்பாட்டாளரிடம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ந.குகதர்சன்