கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் பெரியவட்டவான் கண்ணகி வித்தியாலயம் சித்தாண்டி மாணவர்களின் கல்வி நடவடிக்கையை கருத்தில் கொண்டு குடி நீர் வசதி,கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் பாடசாலைக்கான பெயர் பலகையும் அமைக்கப்பட்டு திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.
குறித் நிகழ்வில் அதிதிகளாக கேணல் சமிந்தகருணாரத்ன, கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் கே.சித்திரவேல்,இவ் திட்டத்திற்கு உதவி புரிந்த நன்கொடையாளர் திருமதி நிரோசா சித்திக் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
குறித்த பாடசலையானது கிரான் பிரதேசத்தின் மிகவும் பின்தங்கிய இடத்தில் காணப்படுகிறது.
இவ் பாடசாலையில் நீண்ட காலமாக குடி நீர் வசதியின்றி மாணவர்கள் சிரமப்பட்டு வந்தனர்.
குறித்த நிலைமையை கண்டறிந்த குடும்பிமலை இராணுவத்தினர் அதனை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ந குகதர்சன்