தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சிக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும்- எம்.ஏ.சுமந்திரன்

 


தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சிக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

இலங்கை தமிழரசுக் கட்சியின் வடமராட்சிக்கிளை அலுவலகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் “யாழ்ப்பாணத் தமிழர்களின் ஆதரவு கூட தமிழ்க் கட்சிகளுக்கு கிடையாது. தேசிய மக்கள் சக்திக்கு தான் அந்த ஆணை கொடுக்கப்பட்டிருக்கிறது என அராசாங்கம் சொல்ல தலைப்படுகின்றது.

அது ஒரு தவறான விம்பம். எனவே உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சிக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும்.

உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நீதிமன்றில் முரண்பாடான தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதீமன்றில் ஏற்றுக் கொள்ளப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதை உச்ச நீதிமன்றில் நிராகரிக்கப்பட்டுள்ளதானது முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.

யாழில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசு பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அமைச்சர் சண்டித்தனத்திலும் ஈடுபட்டுள்ளார்” எனவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிததுள்ளார்.