போத்தல் குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 


 
போத்தல் குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்யும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபை இவ் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இவ் வர்த்தமானி 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிட்டுள்ளது.
அதன்படி, 500-999 லீற்றர் 70 ரூபாவாகவும், 
1-1,499 லீற்றர் 100 ரூபாவாகவும்,
1.5-1,999 லீற்றர் 130 ரூபாவாகவும், 
2-2,499 லீற்றர் 160 ரூபாவாகவும்,
5-6,999 லீற்றர் 350 ரூபாவாகவும் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது