மல்யுத்தப் போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் முதலிடம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

 


வடமாகாண விளையாட்டுத் திணைக்களம் நடத்திய மாகாண மட்ட திறந்த மல்யுத்தப் போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் முதலிடம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

தொடர்ந்து ஆறாவது முறையாக முல்லைத்தீவு மாவட்டம் முதலிடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.
இன்றைய போட்டியில் முல்லைத்தீவு மாவட்டம் மொத்தம் 15 தங்கப் பதக்கங்களையும், 3 வெள்ளிப் பதக்கங்களையும் கைப்பற்றியது. யாழ்ப்பாண மாவட்டம் இரண்டாம் இடத்தையும், வவுனியா மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.