லண்டன் கிரிஃபின் கல்லூரி சர்வதேச நுண்கலை தேர்வு ஆணையமும் ,மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் பாடசாலை நடன ஆசிரியை திருமதி நித்யா விக்னேஸ்வரன் அவர்களினால் நிர்வகிக்கப்படும் அட்ஷய ஷேஸ்த்ரா பரத நாட்டிய கலைக்கூட மாணவிகளும் இணைந்து மட்டக்களப்பில் முதன் முறையாக "ஆற்றுகையை" பெருமையுடன் அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.
2025.04.19.ம் திகதி மட்டக்களப்பு வில்லியம் மண்டபத்தில் இடம் பெற்ற ஆற்றுகை நிகழ்வுக்கு பிரதான அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலயப்பணிப்பாளர் திருமதி ஷாமினி ரவிராஜ் அவர்களும் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு உதவி கல்விப்பணிப்பாளர் திருமதி சிவஞான சோதிகுரு மலர்விழி முன்னாள் கல்விப்பணிப்பாளர் திரு, திருமதி பவளகாந்தன் , மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் கல்லூரி அதிபர் திருமதி உதயகுமார் தவத்திருமகள் , மற்றும் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக விரிவுரையாளர்களும் கலந்து கொண்டனர் .
ஆற்றுகை நிகழ்வுக்கு ஒருங்கிணைப்பாளராக திருமதி சிவஞான சோதிகுரு மலர்விழி அவர்கள் பங்கேற்றிருந்தார் .
அட்ஷய ஷேஸ்த்ரா பரத நாட்டிய கலைக்கூட நிறுவனர் திருமதி நித்யா விக்னேஸ்வரன் அவர்களின் நெறியாள்கையில் ஆற்றுகை நிகழ்வு இடம் பெற்றது.
பெற்றோர்கள் ஆசியுரை வழங்க , இறை வழிபாட்டுடன் ஆற்றுகை ஆரம்பமானது .
திருமதி நித்யா விக்னேஸ்வரன் அவர்களின் அட்ஷய ஷேஸ்த்ரா மாணவிகள் ஐவர் ஆற்றுகையை மிக சிறப்பாக அரங்கேற்றிருந்தார்கள்
இஷானிகா..விக்னேஸ்வரன்
ஷோஷனா.பிரசந்தன்
வினித் பிரியா.பாலகிருஷ்ணன்
சப்திகா.ஜோசப் நகுலன்
ரஜிந்தா.ரவீந்திரகுமார் .
மேலும் நட்டுவாங்கம் நெறியாள்கை
திருமதி.நித்தியா விக்னேஸ்வரன்
முதுகலைமானி
பாட்டு
நரேந்திரா .சுரேந்திரா
முதுகலைமானி
கல்யாண் சரன். அழகரத்தினம்
முதுகலைமானி
மிருதங்கம்
லோவிகரன்.சுதாகரன்
முதுகலைமானி
வயலின்
சிற்சபேசன்.பிரதீபன்
முதலாம் வருட மாணவன்
பொறியியல் துறை
யாழ் . பல்கலைக்கழகம்
புல்லாங்குழல்
சேது மாதவன்.இராமகிருஷ்ணராஜா
நுண்கலைமானி
ஜதி
கரிஷ்சன்.விக்னேஸ்வரன்
மட்/புனித மிக்கேல் கல்லூரி உயர்தர மாணவன்
உயிரியல் துறை
பின்னணி இசை வழங்கி அரங்கத்தை ஆச்சரியப்பட வைத்தனர்.
நிகழ்வுக்கு மாணவிகளின் பெற்றோர்கள் , ஆசிரியர்கள் , கல்விமான்கள்
சமூக ஆர்வலர்கள் கலந்து சிறப்பித்தார்கள் .