
சர்வதேச
இளம் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி மகாநாட்டில் இலங்கை அணியின் தலைவராக விஞ்ஞான
பட்டதாரி ஆசிரியர் செல்வராஜா தேவகுமார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பாண்டிருப்பைச் சேர்ந்த இவர் களுவாஞ்சிகுடி பட்டிருப்பு தேசிய பாடசாலை ஆசிரியராவார்.
தாய்லாந்து
நாட்டில் எதிர்வரும் ஏப்ரல் 5 முதல் 11 வரை நடைபெறவுள்ள சர்வதேச இளம்
விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி மகாநாட்டில் நடைபெறவுள்ள போட்டி நிகழ்வுகளில்
பங்குபற்றச் செல்லும் இலங்கை அணியின் தலைவராகவே இவர் தெரிவு
செய்யப்பட்டார்.
திரு. தேவகுமார் மேலதிகமாக காரைதீவு விபுலானந்தா கல்வியகத்தில் இரசாயனவியல் பாடத்தை பல்லாண்டு காலம் கற்பித்து வருகிறார்.
பட்டிருப்பு
தேசிய பாடசாலையின் இரசாயனவியல் ஆசிரியர் செல்வராஜா தேவகுமார் தேசிய
விஞ்ஞான மன்றம் மற்றும் கல்வி அமைச்சினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர்
தலைமைதாங்கும் இலங்கை அணியில் இலங்கையின் பிரபல பாடசாலைகளைச் சேர்ந்த 6
மாணவர்கள் உள்ளடங்குவார்கள். இவர்கள் சர்வதேச இளம் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி
மகாநாட்டில் நடைபெறவுள்ள போட்டி நிகழ்வுகள் மற்றும் இதர நிகழ்வுகளிலும்
பங்குபற்றவுள்ளனர்.
மேலும்,
சர்வதேச ஆராய்ச்சிக் குழுவினால் செல்வராஜா தேவகுமார் ஆசிரியரை அங்கு
நடைபெறவுள்ள பல்வேறு போட்டி நிகழ்வுகளுக்கும் நடுவராகப் பணியாற்றவும்
அழைக்கப்பட்டுள்ளார்.
இவர் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் பழைய மாணவராவார்,
( வி.ரி.சகாதேவா)