FREELANCER
நடைபெறவுள்ள 2025 ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு பிரதேச வேட்பாளர்களின் அலுவலகங்கள் புதூர் பட்டிருப்பு நாவற்குடா, மகிழடித்தீவு மற்றும் பாலமீன்மடு ஆகிய பகுதிகளில் தேசிய மக்கள் சக்தியின் அலுவலகங்கள் திறந்து வைக்கப்பட்டது .அதனைத்தொடர்ந்து
மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட கல்லடி 13ம் வட்டாரத்திற்கான தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார அலுவலகம்(23.04.2025) அன்று வட்டார வேட்பாளர் சத்திய சீலன் தலைமையில் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணித் தலைவி வனிதா ,மாநகர சபைக்கான முதன்மை வேட்பாளர் DR.K.பிரேமகுமார் மற்றும் தோழர் கமலி ஆகியோரின் பங்குபற்றுதலுடன் திறந்துவைக்கப்பட்டது.
நிகழ்வுக்கு கட்சி ஆதரவாளர்கள் ,உறுப்பினர்கள் மற்றும் பிரதேச வாழ் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் .