அமெரிக்கா விதித்துள்ள வரி விகிதம் இலங்கையின் பொருளாதார எதிர்காலத்தில் மிகவும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
“ஏற்கனவே இருந்த 12% சுங்க வரி 40%க்கும் அதிகமாக அமுல்படுத்தப்பட்டுள்ளதை காணமுடிகிறது.மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள சுங்க வரி மிக அதிகமாக இருப்பதை காணமுடிகிறது.இந்நிலையின் அடிப்படையில் இலங்கையின் ஏற்றுமதியில் இது கடும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
இலங்கையின் ஏற்றுமதியில் 25% க்கும் அதிகமானவை அமெரிக்காவுக்கே ஏற்றுமதியாகிறது என்பதை நாம் அறிவோம். குறிப்பாக ஆடை அணிகளன் போன்றவை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுவதால், அமெரிக்காவில் அவற்றிற்கு நல்ல கிராக்கி இருந்தது. இந்தக் வரி கொள்கையினால் இலங்கையின் ஏற்றுமதியை கடுமையாகப் பாதிக்கலாம் .ஏற்றுமதி வருமானம் கணிசமாகக் குறையலாம்.
மேலும், இவ்வாறு ஏற்றுமதி வீழ்ச்சியடைந்தால், இலங்கையில் இந்த ஆடைத் தொழிலில் ஈடுபட்டுள்ள பெருந்தொகையானவர்களின் வேலைகள் கூட எதிர்காலத்தில் ஆபத்திற்குள்ளாகும் வாய்ப்பு உள்ளது” என்றார்.