அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பள உயர்வு.

 



பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்ததின்படி, ஏப்ரல் மாதத்தில் அதிகரிக்கப்பட்ட அரச ஊழியர்களின் சம்பளம் நாளை (ஏப்ரல் 10) வழங்கப்பட வேண்டும். தொழில்நுட்ப அல்லது வேறு காரணங்களால் வழங்க முடியாவிட்டால், நிலுவைத் தொகை ஏப்ரல் 25ஆம் திகதிக்குள் கட்டாயம் செலுத்தப்பட வேண்டும்.
இவற்றுடன் , 2025 வரவு செலவுத் திட்டத்தின் அடிப்படையில் தனியார் துறை ஊழியர்களுக்குமான தேசிய குறைந்தபட்ச சம்பளமும் உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான அமைச்சரவை அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.