மட்டக்களப்பில் சடலம் மீட்பு - இனங்கான உதவுமாறு பொலிசார் கோரிக்கை!!

 


மட்டக்களப்பில் இனங்கானப்படாத சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதுடன் குறித்த சடலத்தை இனங்கான உதவுமாறு மட்டக்களப்பு தலைமையக பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மட்டக்களப்பு பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் உயிரிழந்த நிலையில் காணப்பட்ட குறித்த ஆணின் சடலத்தை கண்ட பொதுமக்கள் பொலிசாருக்கு அறிவித்ததனைத் தொடர்ந்து குறித்த சடலத்தை மட்டக்களப்பு தலைமையக பொலிசார்  மீட்டுள்ளதுடன், சடலத்தை இனங்கான உதவி புரியுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள்  விடுத்துள்ளனர்.

சடலம் தொடர்பான மேலதிக விசாரனைகளை மட்டக்களப்பு மாவட்ட தடயவியல் பொலிசாரும், மட்டக்களப்பு தலைமையக பொலிசாரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சடலமானது உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.