புத்தாண்டை முன்னிட்டு அரசாங்கத்தினால் அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் சந்தோச நிலையங்களில் விற்பனை பொதுமக்கள் மகிழ்ச்சி
புத்தாண்டை முன்னிட்டு அரசாங்கத்தினால் பல நலத்திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது
இதன் ஒரு கட்டமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள சந்தோச மொத்த விற்பனை நிலையங்களில் பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் விசேட விலை கழிவுடன் விற்பனை செய்து வருகின்றனர்
புத்தாண்டு காலத்தில் பொது மக்களுக்கு தேவையான அரிசி சீனி பால்மா பருப்பு கோதுமை மா தேங்காய் எண்ணெய் வெங்காயம்போன்ற பொருட்கள் மிகவும் குறைந்த விலையில் விற்கப்பட்டு வருவதனால் மக்கள் சந்தோஷத்துடன் அதனை வாங்கி செல்வதை காணக் கூடியதாக உள்ளது
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் களியங்காடு பிரதேசத்தில் உள்ள சந்தோச விற்பனை நிலையத்திலும் இன்று மக்கள் அதிகமாக வந்து தங்களுக்கு தேவையான புத்தாண்டு அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் சென்றதை காணக் கூடியதாக இருந்தது
கடைகளில் விற்கின்றதை விட இங்கு தரமான பொருட்கள் மலிவு விலையில் விற்கப்படுவதாகவும் புத்தாண்டை முன்னிட்டு இவ்வாறான மலிவு விற்பனைகள் முன்னெடுக்கப்படுவது பொதுமக்களுக்கு ஒரு வரப் பிரசாதம் எனவே பொதுமக்கள் அதிகமாக இங்கு பொருட்களை கொள்வனவு செய்வதாக வாடிக்கையாளர் ஒருவர் கருத்து தெரிவித்தார்