வனவிலங்குகளின் கணக்கெடுப்பு அறிக்கை இன்று வெளியிடப்பட உள்ளது

 



பயிர்களை சேதப்படுத்தும் வன விலங்குகளின் கணக்கெடுப்பு அறிக்கையை  இன்று(23) வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த கணக்கெடுப்பில் குரங்குகள், மர அணில் மற்றும் மயில் உள்ளிட்ட விலங்குகள் அடங்குகின்றன.
மேலும், நாடு முழுவதும் உள்ள காட்டுப்பகுதிகளை தவிர்ந்து விவசாய நிலங்கள், கிராமங்கள் மற்றும் நகரங்களில் சுமார் 12 மில்லியன் குரங்குகள் இருப்பதாக குறித்த கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.