திருக்கோவில்
பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் பிரபல சமூக செயற்பாட்டாளரும்
தொழிலதிபருமான சுந்தரலிங்கம் சசிகுமார் தலைமையிலான சுயேச்சை குழுவின்
தேர்தல் பரப்புரைகள் ஆரம்பமாகியுள்ளது.
தம்பட்டையில் தேர்தல் பரப்புரை நேற்று(5) சனிக்கிழமை நடைபெற்றது.
வேட்பாளர்
எஸ்.பாஸ்கரன் உள்ளிட்ட வேட்பாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் நடைபெற்ற
அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
தலைமை வேட்பாளர் சு.சசிகுமார் மற்றும் பல வேட்பாளர்களும் உரையாற்றினர்.
இதில் பல பொதுமக்கள் கலந்து கொண்டு எதிர்கால திட்டங்கள் பற்றி கலந்துரையாடினார்கள்.
( வி.ரி.சகாதேவராஜா)