நித்தியானந்தா ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும், உயிருடனும், உத்வேகத்துடனும் இருக்கிறார்.

 


 

 நித்தியானந்தா உயிரிழந்துவிட்டார் என வெளியான தகவலை கைலாசா மறுத்துள்ளது. இந்த விடயத்தைக் கண்டித்து கைலாசா அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
 
நித்தியானந்தாவின் சகோதரி மகன், நித்தியானந்தா ஜீவசமாதி அடைந்துவிட்டார் என காணொலி ஒன்றில் தெரிவித்திருந்தார். இது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
 
இவ்வாறு வெளியான தகவல்களை மறுக்கும் வகையில் கைலாசா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
 
அந்த அறிக்கையில்,  நித்தியானந்தா ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும், உயிருடனும், உத்வேகத்துடனும் இருக்கிறார் என கைலாசா உறுதியாக அறிவிக்கிறது. நித்தியானந்தாவை இழிவுபடுத்தவும் ,அவதூறு செய்யவும் தொடுக்கப்பட்ட இந்த தீய அவதூறு பிரசாரத்தை கைலாசா திட்டவட்டமாக மறுக்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதேவேளை, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பும் அவர் இறந்துவிட்டார் எனவும் வதந்திகள் பரவியிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.